1. உழக்கில் கிழக்கென்ன மேற்கென்ன ?
2. எலி அம்மணத்தோட ஏன் ஒடுது ?
3. எல்லோரும் எள்ளை காயவைத்தால் எலி வாலை காயவைத்ததாம்
4. எள்ளு காய்ந்தால் எண்ணெய்க்கு ஆகும். எலி புழுக்கை காய்ந்தால் எதுக்காகும்
5. காய்ச்ச மரம்தான் கல்லடி படும்
6. நரி இடம் போனால் என்ன, வலம் போனால் என்ன ? மேலே விழுந்து பிடுங்காமல் இருந்தால் சரி.
7. முடியுள்ள சீமாட்டி இடக்கையாலும் முடிப்பாள், வலக்கையாலும் முடிப்பாள்.
8. மேட்டுல விடுவதற்கு பதிலா பள்ளத்திலேயே விடலாம்.
9. மெள்ள மெள்ள வந்தானாம், சுக்கு என்றானாம், மிளகு என்றானாம்..
10. பூவோடு சேர்ந்து நாரும் மணப்பது போல ...
11. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை ?
12. அதிசயமடி மாமியாரே! கொதிக்கிற கஞ்சி சிரிச்சதாம்
13. முன் கை நீண்டால் முழங்கையும் நீளும்
14. உரிய கண்ட பூனை உரிய உரிய தாவுமாம். வரிசை கண்ட மாப்பிள்ளை வலிய வலிய வருவானாம்
15. ஏற்கனவே மாமியார் பேய் கோலம். அதுல அக்கிலி பிக்கிலி வேற
16. இடம் இல்லாத இடத்துக்கு என்ன பெத்தவளும் வந்து உட்கார்ந்தாளாம்
17. சுக்கு கண்ட இடத்தில் பிள்ளையை பெத்துப்பாளாம்.
18. பசித்தவன் பழங்கணக்கு பார்த்தானான்
19. கிடக்கிறதுன்னு கிடக்கட்டும்னு கிழவியை தூக்கி மணைய்ல உட்கார்தினார்களாம்
20. அப்படி என்ன மொளகு சாறு பொங்கி வழியறது ?
21. மூத்தாளும் முட்டுக்கு உதவுவாள்
22. தோண்டியும் பொத்தல், கயறும் அறுதலா இருந்தால் என்ன செய்ய ?
No comments:
Post a Comment