Saturday, July 27, 2013

பார்த்திபன் கனவு

சோழ நாடு, பல்லவ நாடு, காவேரி, நரசிம்ம பல்லவர், சிவனடியார், விக்ரமன், குந்தவி, பொன்னன்… மறக்க முடியாத பாத்திரங்கள். சோழ வளம், பல்லவ ஆட்சி பற்றிய வர்ணனைகள், படிக்க படிக்க திகட்டாதவை. கல்கியின் சிறந்த படைப்புகளில் ஒன்று. நீண்ட நாட்களுக்கு பின் கல்கியின் பார்த்திபன் கனவு படித்து முடித்தேன்.

மன்னி, கல்கியின் புத்தகங்கள் படிக்க வேண்டும் என ஆசை பட்டதால் பொன்னியின் செல்வன், அலைஓசை மற்றும் பார்த்திபன் கனவு அனைத்து பாகங்களையும் 2007ல் வாங்கினேன். மன்னி காலமாவதற்கு முன் எல்லா புத்தகங்களையும் படித்து விட்டார்.


நேரமின்மை (??) காரணத்தால் இதுவரை படிக்காமல் இருந்தேன். இப்போது படிக்க ஆரம்பித்து விட்டேன்.  இனி மீதி புத்தகங்களையும் படித்து முடித்து விடுவேன்.


2 comments:

S.Ramamurthy said...

Sivakamiyin Sabadam and Thyaga Boomi - these two are other important books of Kalki. Please include in your list of books to be raed.

Anonymous said...

நல்லதொரு முடிவு. இனிதாக முடியட்டும்.