அப்போது 6வது படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் ஆசிரியர் திடீரென classல் எல்லோரையும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். நமக்கும் பயம். ஒழுங்கா பதில் சொல்லியாக வேண்டுமே.. இல்லா விட்டால் விஷயம் உடனே ஆத்துக்கு தெரியபடுத்தபடும். ஆசிரியர் எங்க தெருதான். Easyயான கேள்வி வரவேண்டும் என வேண்டுதல். பக்கத்தில் பார்த்தால், சாம்பசிவம் ஏதோ முணுமுணுக்கிறான்.
என்னடா என்று நைசா கேட்டால், கோயில் குருக்கள் மந்திரம் சொல்லி கொடுத்திருக்கிறார்.
அதை 21 தடவை சொன்னால் எல்லாம் நல்லபடியாக முடியும் என்கிறான். ஏதோ ஓம் கிரீம் என்று கேட்கிறது. எனக்கும் சொல்லி கொடுடா என அழாத குறையா கேட்டும் சொல்லவில்லை. நல்லவேளை. என் turn (even சாம்பசிவம்) வருவதற்குள் மணி அடித்து விட்டது. தப்பித்து விட்டேன்.
இன்று வரை தெரியாது. அது மந்திரம்தானா என்பது. சாம்பசிவத்திற்கே வெளிச்சம்.
இன்று வரை தெரியாது. அது மந்திரம்தானா என்பது. சாம்பசிவத்திற்கே வெளிச்சம்.
No comments:
Post a Comment