Saturday, December 19, 2020

புயல்

 

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும், ஆண்டு முழுவதும், பல புயல்கள் கடலில் உருவாகி கரைகடந்து போய்கொண்டுதான் உள்ளது. இவற்றில் பல சாதாரண புயல், சில தீவிர/மிக தீவிர புயல்கள்.

என் வாழ்வில் முதல் 24 வருடம் கடற்கரை நகரில்தான் வாசம். இதில் 5 வருடம் கடற்கரையிலேயே...

அப்போது எல்லா வருடமும் புயல்(கள்) வரும். காத்து அடிக்கும். மழை பெய்யும். மரம் விழும். வானிலை அறிக்கை என நாளில் 3 முறை சொல்லுவார்கள். அவ்வளவுதான்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாங்களாகவே பள்ளிகளை தேவையானவர்களுக்காக திறந்து விடுவார்கள். தேவையான குடும்பம் உபயோக படுத்திக்கொள்ளும். அக்கம் பக்கம் உள்ள நல்ல உள்ளங்கள் உணவு கொடுத்து உதவுவார்கள். தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து விழுந்த மரங்களை அப்புற படுத்திவிடுவார்கள். இரண்டாம் நாள் பழைய வாழ்க்கை ஆரம்பம். அதிகமான புலம்பல்கள் கிடையாது.

இன்று இந்த டிவி சானல்கள் பண்ணுகிற அலப்பறை தாங்கமுடியவில்லை .

உடனுக்குடன் செய்தி சொல்கிறோம் என்று 3 நாட்களாக, முதல் முறையாக புயல் அடிக்கப்போவது போல், லைவ் / chat shows... தண்ணீர் சேர்ந்துவிட்டது, கரண்ட் போய்விட்டது..மரம் விழுந்துவிட்டது... வெள்ளம் வருகிறது... ஏரி உடை போகிறது... வாழ்வாதாரம் போய்விட்டது.... உணவு கிடைக்கவில்லை... குடிக்க தண்ணீர் இல்லை... கொசு கடிக்கிறது... பாம்பு வீட்டின் உள்ளே வரும் என பயமாக உள்ளது... குழந்தைக்கே பால் கிடைக்கவில்லை.... பஸ்/ரயில் ஓடவில்லை.... மூன்று நாளில் எவ்வளவு negative எண்ணத்தை விதைக்க முடியுமோ அவ்வளவு செய்தாயிற்று. தாங்க முடியவில்லை.

முழங்கால் அளவு தண்ணீரில் boatல் ஒரு பெண்ணை உட்காரவச்சி நாலு பேர் வெள்ளத்திலிருந்து வெளியேற்றுகிறார்கள் என ஒரு cliping, மெரினா கடற்கரையிலிருந்து நேரடி காட்சி என காற்று அடிப்பதால் ஆடும் மரத்தை பாருங்கள் என ஒரு காட்சி... இது போன்ற hype வேறு எங்கும் நடப்பது இல்லை.

டிவி சானல்தான் இப்படி என்றால் மக்களும் இதுக்கு மேல். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை whatsapp, facebook status update - மேகம் கருப்பா வருது, மழை துரல் ஆரம்பித்து விட்டது, நல்லா மழை பெய்யுது, ஜன்னல திறந்து வச்சா காத்து வீட்டைக்குள்ள அடிக்குது, பவர் கட்டாயிடுத்து என்பதிலிருந்து Be safe, Take care, power cutஆல் motor ஓடாது - எனவே வீட்டில் இருக்கும் உத்ரணியிலும் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளவும் என்பது வரை அட்வைஸ்.

புயல் வருது என்றாலே தாங்கமுடியாது போலிருக்கு...

No comments: