புடவை வாங்குவது அவ்வளவு ஈசியான வேலை இல்லை... கடைக்கு போனால்......
* என்ன rangeல பாக்கறீங்க. 400/500 ஆ இல்ல 4000/5000 மா?
** எல்லாத்தையும் காட்டுங்க. விலை பத்தி ஒண்ணும் இல்லை. புடிச்சிருக்கணும், அதான் முக்கியம்.
* என்ன material பாக்கறீங்க
** எல்லாத்தையும் பாக்கலாம்.
* ஏதாவது கலர் specificஆ வேணுமா?
** எல்லா கவரும் இருக்கு. Specialஆ, புது கலரா வேணும்
* Self designஆ இல் printedஆ
** இரண்டையும் காட்டினால்தான் select பண்ண முடியும்
* இதுல இந்த 6 கலர் வருது.
** வேற என்ன கலர் இருக்கு. இது எதுவும் நல்லா இல்லை.
* எதுவும் பிடிக்கலையா.. இது latest இப்பதான் வந்தது. பாருங்க
** சரி.. fullஆ பிரிச்சி காட்டுங்க.
* எப்படி இருக்கு?
** பரவாயில்லை. ஆனா இந்த பல்லுக்கு பதில் அந்த புடவையில இருக்கிற பல்லு வருமா?
* வராதுமா. வேற எது பிடிக்குது
** அப்போ இந்த கலர் புடவைல அந்த பார்டர் வர புடவையை காட்டுங்க
* இரண்டும் வேற வேற. வராதும்மா
** அப்படினா இந்த கலர் பார்டர்ல அந்த பார்டர் design வருமா?
* இல்லையம்மா. இதெல்லாம் single piece தான் வந்திருக்கு.
** சரி... இதன் நீளம் fullஆ இருக்குமா? Blouse bitஐ சேர்க்காத சொல்லரேன்.
* இது extra length பபடவைங்கம்மா
** போனதடவையும் இதையேதான் சொன்னீங்க. இரண்டு pleatக்கு மேல வரல. Ok இந்த புடவைய தனியா வைங்க. வேற பாத்துட்டு finalஆ select பண்றேன்.
*
* இந்த புடவையையே எடுத்துக்கறீங்களா? Bill போட சொல்லட்டுமா?
** சரி இதையே எடுத்துக்கறேன்.. பில் கொண்டாங்க...... ஒரு நிமிஷம்.... அதோ அந்த அம்மா கையில ஒரு புடவை வச்சிருக்காங்களே... அத காட்டுங்க.. ரொம்ப நல்லா இருக்கே... அவங்க வாங்கிட்டாங்களா?
* இன்னும் வாங்கல...
** அப்போ அந்த புடவைக்கு bill போட்டு கொண்டாங்க.
ஒரு வழியா bill pay பண்ணி delivery வாங்கி, கட்டை பையும் வாங்கி (extra வா இரண்டு சாதா கவர் கேட்டு வாங்கி) அதில் போட்டு வீட்டுக்கு வந்ததும்,
**அடடா... இதே கலர் புடவை எங்கிட்ட இருக்கே. கடைல பார்த்த போது வேற மாதிரி தெரிஞ்சது. இப்போ வேற மாதிரி இருக்கு. ஜாக்கிரதையா மடிப்பு கலையாம எடுத்து வைங்கோ. நாளைக்கு போய் வேற புடவை மாத்தனும்....
No comments:
Post a Comment