ரொம்ப நாளாச்சு.. BP பாத்து. இன்னக்கி பார்க்கலாம்னு எடுத்தோம்.
முதலில் எனக்கு.... Reading 179/115 என காட்டியது. அதிகமா இருக்கே, என நினைத்த போது இரண்டாவது தடவை எடுத்து பார்க்கலாமே என சொன்னேன். உடனே on செய்து பார்த்தேன். இப்போது 177/114 என காட்டியது. மனம் ஒத்துக்க வில்லை. ரொம்ப நாளா மெஷினை எடுக்காததால் சரியாக வரவில்லை போல் இருக்கு என சொல்லி மூன்றாவது முறை எடுத்தேன். இப்போ 166/109 என காட்டியது. என்ன இது ஒவ்வொரு முறையும் மாத்தி மாத்தி காட்டுதே என சொல்லி கடைசியா பார்க்கலாம்னு நாலாவது முறை பார்த்தேன். இப்போ 147/108. சரி சரி கொஞ்சம் அதிகம்..மாத்திரை வாங்கி ஒரு வாரம் சாப்பிட்டா சரியாயிடும் என சொல்லி என் projectஐ முடித்தேன்.
அடுத்த project மனைவிக்கு... முதல் முறை 142/82. மனசு ஒத்துக்க வில்லை. மீண்டும் பார்த்ததில் 141/83. இல்லை இல்லை. இரண்டாம் முறை உடனே பார்க்க கூடாது. கொஞ்சம் time கொடுத்துதான் பார்க்க வேண்டும். ஒரு 2 நிமிடம் கழித்து பார்க்கலாம் என சொல்லி 2 நிமிடம் கழித்து பார்த்தோம். இப்போ 139/80. அடுத்து என்ன காரணம் சொல்லலாம் என யோசித்த போதுதான் தோணித்து- வலது கையில் பார்க்க கூடாது. இடது கையில் தான் பார்க்க வேண்டும் என்ற "உண்மை". சரி இடது கையில் ஒருமுறை பார்த்துவிடலாம் என பார்த்தால் 136/80. சந்தோஷம். BP perfectஆ இருக்கு...
இதுவரை நாங்கள் மீண்டும் மீண்டும் reading எடுத்து பார்க்க கண்டுபிடித்த வேறு காரணங்கள்:
1. சாப்பிட்ட உடன் பார்த்தால் மீண்டும் பார்க்க வேண்டும்
2. கையை வைத்திருந்த angle சரியில்லை.
3. படி ஏறி இப்பதான் வந்தேன்.
4. Battery power lowவாக இருக்கலாம்.
No comments:
Post a Comment