நேற்று சத்ரபதி சிவாஜி பற்றி குழுவில் ஒரு போஸ்ட். இன்றைய நாட்களில் பள்ளியில் இவரைப்பற்றி சொல்லி தருவது இல்லை என்று. உண்மையாக இருக்கலாம்.
நான் படித்த போது, பள்ளியில் ஆண்டுதோரும் வகுப்பு மாணவர்களை 6 குழுக்களாக பிரிப்பார்கள். ஒவ்வொரு குழுவிற்கு வாரம் ஒரு வேலை. வகுப்பை பெருக்கி சுத்தம் செய்வது, குடிக்க தண்ணீர் கொண்டு வைப்பது, வீட்டுப்பாட நோட்டுகளை வாங்கி அடுக்கி வைப்பது, மாணவர்களை அமைதியாக இருக்க வைப்பது, black board cleaning, குழுவிற்குள் பாட சந்தேகம் தீர்த்து வைப்பது போன்ற வேலைகள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு குழுவும் தங்கள் அணி தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். அந்த தலைவர் தன் அணிக்கு ஒரு நாட்டு தலைவர் பெயரை சூட்டிக்கொள்ள வேண்டும்.
குழு என்பது attendance படி 7 பேரோ 8 பேரோ இருப்பார்கள். என் பெயர் Sல் தொடங்குகிறது. எப்போதும் கடைசி குழுதான். கொஞ்சம் படிப்பும் உண்டு என்பதால் தலைவர் பதவியும் உண்டு.
முதல் குழுவிலிருந்து ஒவ்வொருவறாக நாட்டு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். காந்தி, நேரு, பாரதி, திருவள்ளுவர், பட்டேல் வ.ஊ.சி என selectஆகிவிடும். எனக்கு இவர்களில் ஒருவரை வைத்துக்கொள்ள ரொம்ப ஆசை. ஆனால் கடைசியில் இருப்பதால் எந்த வருடமும் கிடைக்காது. அப்போதுதான் என் ஆசிரியர், சிவாஜி, நேதாஜி, கோகலே பற்றி வகுப்பு எடுத்து அவர்களது பெருமைகளை சொல்லி இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க சொன்னார். அதன் பின் 2,3 முறை சிவாஜிதான் எங்கள் குழு..
No comments:
Post a Comment