Saturday, December 19, 2020

Saree Buying....

புடவை வாங்குவது அவ்வளவு ஈசியான வேலை இல்லை... கடைக்கு போனால்......

* என்ன range பாக்கறீங்க. 400/500 இல்ல 4000/5000 மா?

** எல்லாத்தையும் காட்டுங்க. விலை பத்தி ஒண்ணும் இல்லை. புடிச்சிருக்கணும், அதான் முக்கியம்.

* என்ன material பாக்கறீங்க

** எல்லாத்தையும் பாக்கலாம்.

* ஏதாவது கலர் specific வேணுமா?

** எல்லா கவரும் இருக்கு. Special, புது கலரா வேணும்

* Self design இல் printed

** இரண்டையும் காட்டினால்தான் select பண்ண முடியும்

* இதுல இந்த 6 கலர் வருது.

** வேற என்ன கலர் இருக்கு. இது எதுவும் நல்லா இல்லை.

* எதுவும் பிடிக்கலையா.. இது latest இப்பதான் வந்தது. பாருங்க

** சரி.. full பிரிச்சி காட்டுங்க.

* எப்படி இருக்கு?

** பரவாயில்லை. ஆனா இந்த பல்லுக்கு பதில் அந்த புடவையில இருக்கிற பல்லு வருமா?

* வராதுமா. வேற எது பிடிக்குது

** அப்போ இந்த கலர் புடவைல அந்த பார்டர் வர புடவையை காட்டுங்க

* இரண்டும் வேற வேற. வராதும்மா

** அப்படினா இந்த கலர் பார்டர்ல அந்த பார்டர் design வருமா?

* இல்லையம்மா. இதெல்லாம் single piece தான் வந்திருக்கு.

** சரி... இதன் நீளம் full இருக்குமா? Blouse bit சேர்க்காத சொல்லரேன்.

* இது extra length பபடவைங்கம்மா

** போனதடவையும் இதையேதான் சொன்னீங்க. இரண்டு pleatக்கு மேல வரல. Ok இந்த புடவைய தனியா வைங்க. வேற பாத்துட்டு final select பண்றேன்.

*

* இந்த புடவையையே எடுத்துக்கறீங்களா? Bill போட சொல்லட்டுமா?

** சரி இதையே எடுத்துக்கறேன்.. பில் கொண்டாங்க...... ஒரு நிமிஷம்.... அதோ அந்த அம்மா கையில ஒரு புடவை வச்சிருக்காங்களே... அத காட்டுங்க.. ரொம்ப நல்லா இருக்கே... அவங்க வாங்கிட்டாங்களா?

* இன்னும் வாங்கல...

** அப்போ அந்த புடவைக்கு bill போட்டு கொண்டாங்க.

ஒரு வழியா bill pay பண்ணி delivery வாங்கி, கட்டை பையும் வாங்கி (extra வா இரண்டு சாதா கவர் கேட்டு வாங்கி) அதில் போட்டு வீட்டுக்கு வந்ததும்,

**அடடா... இதே கலர் புடவை எங்கிட்ட இருக்கே. கடைல பார்த்த போது வேற மாதிரி தெரிஞ்சது. இப்போ வேற மாதிரி இருக்கு. ஜாக்கிரதையா மடிப்பு கலையாம எடுத்து வைங்கோ. நாளைக்கு போய் வேற புடவை மாத்தனும்.... 

கொலு

இன்று....

எல்லாம் ரெடி. மாப்பிள்ளை உட்கார்ந்தாச்சு. சாஸ்திரிகளும் தன் வேலையை ஆரம்பித்தாயிற்று. பார்க்க வந்தவர்களும் கூடியாயிற்று.

பார்த்தால் கல்யாண பெண்ணை காணவில்லை. கஷ்டபட்டு எல்லோரும் தேடினால்......

வேறு பெட்டிக்குள் ஒளிந்துக்கொண்டு இருக்கிறாள்.

தூக்கிக்கொண்டு வந்து மாப்பிள்ளை பக்கத்தில் உட்கார வைத்து விட்டோம்...

எங்காத்து கொலுவில்..

 

DEATH

WHAT A WONDERFUL WAY TO EXPLAIN IT.

A sick man turned to his doctor as he was preparing to leave the examination room and said, 'Doctor, I am afraid to die'.

Tell me what lies on the other side.'

Very quietly, the doctor said, 'I don't know.'

'You don't know? You're, a Hindu man, and don't know what's on the other side?'

The doctor was holding the handle of the door;

On the other side came a sound of scratching and whining,

And as he opened the door, a dog sprang into the room

And leaped on him with an eager show of gladness.

Turning to the patient, the doctor said, 'Did you notice my dog? He's never been in this room before. He didn't know what was inside.

He knew nothing except that his master was here, and when the door opened, he sprang in without fear.

I know little of what is on the other side of death,

But I do know one thing...

My Master is there and that is enough. 

புயல்

 

ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக உலகம் முழுவதும், ஆண்டு முழுவதும், பல புயல்கள் கடலில் உருவாகி கரைகடந்து போய்கொண்டுதான் உள்ளது. இவற்றில் பல சாதாரண புயல், சில தீவிர/மிக தீவிர புயல்கள்.

என் வாழ்வில் முதல் 24 வருடம் கடற்கரை நகரில்தான் வாசம். இதில் 5 வருடம் கடற்கரையிலேயே...

அப்போது எல்லா வருடமும் புயல்(கள்) வரும். காத்து அடிக்கும். மழை பெய்யும். மரம் விழும். வானிலை அறிக்கை என நாளில் 3 முறை சொல்லுவார்கள். அவ்வளவுதான்.

பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாங்களாகவே பள்ளிகளை தேவையானவர்களுக்காக திறந்து விடுவார்கள். தேவையான குடும்பம் உபயோக படுத்திக்கொள்ளும். அக்கம் பக்கம் உள்ள நல்ல உள்ளங்கள் உணவு கொடுத்து உதவுவார்கள். தெரிந்தவர்கள் ஒன்று சேர்ந்து விழுந்த மரங்களை அப்புற படுத்திவிடுவார்கள். இரண்டாம் நாள் பழைய வாழ்க்கை ஆரம்பம். அதிகமான புலம்பல்கள் கிடையாது.

இன்று இந்த டிவி சானல்கள் பண்ணுகிற அலப்பறை தாங்கமுடியவில்லை .

உடனுக்குடன் செய்தி சொல்கிறோம் என்று 3 நாட்களாக, முதல் முறையாக புயல் அடிக்கப்போவது போல், லைவ் / chat shows... தண்ணீர் சேர்ந்துவிட்டது, கரண்ட் போய்விட்டது..மரம் விழுந்துவிட்டது... வெள்ளம் வருகிறது... ஏரி உடை போகிறது... வாழ்வாதாரம் போய்விட்டது.... உணவு கிடைக்கவில்லை... குடிக்க தண்ணீர் இல்லை... கொசு கடிக்கிறது... பாம்பு வீட்டின் உள்ளே வரும் என பயமாக உள்ளது... குழந்தைக்கே பால் கிடைக்கவில்லை.... பஸ்/ரயில் ஓடவில்லை.... மூன்று நாளில் எவ்வளவு negative எண்ணத்தை விதைக்க முடியுமோ அவ்வளவு செய்தாயிற்று. தாங்க முடியவில்லை.

முழங்கால் அளவு தண்ணீரில் boatல் ஒரு பெண்ணை உட்காரவச்சி நாலு பேர் வெள்ளத்திலிருந்து வெளியேற்றுகிறார்கள் என ஒரு cliping, மெரினா கடற்கரையிலிருந்து நேரடி காட்சி என காற்று அடிப்பதால் ஆடும் மரத்தை பாருங்கள் என ஒரு காட்சி... இது போன்ற hype வேறு எங்கும் நடப்பது இல்லை.

டிவி சானல்தான் இப்படி என்றால் மக்களும் இதுக்கு மேல். ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை whatsapp, facebook status update - மேகம் கருப்பா வருது, மழை துரல் ஆரம்பித்து விட்டது, நல்லா மழை பெய்யுது, ஜன்னல திறந்து வச்சா காத்து வீட்டைக்குள்ள அடிக்குது, பவர் கட்டாயிடுத்து என்பதிலிருந்து Be safe, Take care, power cutஆல் motor ஓடாது - எனவே வீட்டில் இருக்கும் உத்ரணியிலும் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்ளவும் என்பது வரை அட்வைஸ்.

புயல் வருது என்றாலே தாங்கமுடியாது போலிருக்கு...

Saturday, March 24, 2018

மந்திரம்.. ?


அப்போது 6வது படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் ஆசிரியர் திடீரென classல் எல்லோரையும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டார். நமக்கும் பயம். ஒழுங்கா பதில் சொல்லியாக வேண்டுமே.. இல்லா விட்டால் விஷயம் உடனே ஆத்துக்கு தெரியபடுத்தபடும். ஆசிரியர் எங்க தெருதான். Easyயான கேள்வி வரவேண்டும் என வேண்டுதல். பக்கத்தில் பார்த்தால், சாம்பசிவம் ஏதோ முணுமுணுக்கிறான். என்னடா என்று நைசா கேட்டால், கோயில் குருக்கள் மந்திரம் சொல்லி கொடுத்திருக்கிறார். அதை 21 தடவை சொன்னால் எல்லாம் நல்லபடியாக முடியும் என்கிறான். ஏதோ ஓம் கிரீம் என்று கேட்கிறது. எனக்கும் சொல்லி கொடுடா என அழாத குறையா கேட்டும் சொல்லவில்லை. நல்லவேளை. என் turn (even சாம்பசிவம்) வருவதற்குள் மணி அடித்து விட்டது. தப்பித்து விட்டேன்.

இன்று வரை தெரியாது. அது மந்திரம்தானா என்பது. சாம்பசிவத்திற்கே வெளிச்சம்.