Saturday, March 14, 2009

தொட‌ர் நாட‌க‌ க‌டித‌ம்

சென்னை-4


போன‌ வார‌ம் TVல் சென்ற‌ வார‌ உல‌க‌ம் பார்த்துக்கொண்டு இருந்த‌ போது GRS-ன் வாரிசு வின் க‌ல்யாண‌ காச‌ட் வ‌ந்த‌து. உட‌னே அதை Ek Nazar பார்க்க‌ வேண்டும் என்று சுபா அட‌ம் பிடிக்க‌, நாங்க‌ள் யாவ‌ரும் ர‌வி க‌ல்யாண‌ Live Show காச‌ட் பார்த்ததோம்

காச‌ட் செய்திக‌ள் உட‌ன் ஆர‌ம்பித்திருந்த‌து அம‌ர்க‌ள‌ம் தான் போங்க‌ள். ஜான‌வாச‌த்தின் போது வீட்டு பெண்க‌ள் எல்லோரும் தில்லானா தில்லானா மாதிரி டான்ஸ் ஆடின‌து தூள் சீன்மா. க‌ல்யாண‌த்திற்கு வ‌ந்திருந்த‌ பெண்க‌ளின் புட‌வைக‌ளின் நிற‌ங்க‌ள் தான் எத்த‌னை ?

குல‌விள‌க்குக‌ள் ராஜி, சித்ரா, ஜெய‌ஸ்ரீ, க‌ங்கா, ய‌முனா, ச‌ர‌ஸ்வ‌தி போல‌ பாச‌ம‌ல‌ர்க‌ள் ஆக‌ வ‌ல‌ம் வ‌ந்த‌து பார்க்க‌ ஜோராக‌ இருந்த‌து (ம‌ன்னி, திருஷ்டி சுற்றி போட்டுவிடுங்க‌ள்).

சித்திக்க‌ள் ம‌ற்றும் உள்ள‌ சொந்த‌ம் ஒரே குடும்ப‌ம் ஆக‌ இருந்து க‌ல்யாண‌ம் ப‌ண்ணி வைத்த‌தை பார்த்த‌போது, இது ஒரு சூப்ப‌ர் குடும்ப‌ம் என‌ சொல்ல தோன்றுகிற‌து. இது ந‌ம்ப‌ குடும்ப‌ம் அல்ல‌வா?


காஸ‌ட்டில் இருந்த‌ பாட‌ல்க‌ள் அத்த‌னையும் டாப் டென் னை பார்க்கும் ஞாப‌க‌த்தை ஏற்ப‌டுத்தின‌.


க‌ல்யாண‌ ரிச‌ப்ஷ‌ன் ஒரு புற‌ம், ச‌ப்த‌ஸ்வ‌ர‌ங்க‌ள் உட‌ன் க‌ச்சேரி ஒரு புற‌ம், அர‌ட்டை அர‌ங்க‌ம் த‌னியாக‌ என்று க‌ல்யாண‌ ரிச‌ப்ஷ‌ன் வெகு ஜோராக‌ இருந்த‌து.


டின்ன‌ரின் போது ஏற்பாடு செய்திருந்த‌ அயிட்ட‌ங்க‌ளை பார்த்த‌போது மாயா ப‌ஜார் இங்கு எங்கு வ‌ந்த‌து என‌ ஆச்ச‌ர்ய‌ப‌ட்டு போனோம் !


சின்ன‌ சின்ன‌ காய்க‌றிக‌ளில் வித‌வித‌மான‌ அல‌ங்கார‌ பொம்மைக‌ள் கொள்ளை அழகு. Small Wonder !


ந‌ம்ம‌ வீட்டு பெண்க‌ள் ரமா, உஷா, பாமா, நிச்ச‌ய‌தார்த்த‌த்தின் போது பட்டு புட‌வைக‌ளில் ஜொலித்தார்க‌ள்..(ஆமாம், நிச்ச‌ய‌தார்த்த‌த்தின் போது, ராதா க‌ட்டியிருந்த‌ புட‌வை ப‌ஞ்ச‌வ‌ர்ணகிளிப் ப‌ச்சை தானே?)


இந்த‌ காஸெட்டில் பார்த்த‌ காட்சிக‌ள் நினைவில் நீங்காத‌வை! என்றும் இனிய‌வை! இந்த‌ காஸட் ஒரு Most Wanted காஸெட்டாக‌ இருக்கும் என்ப‌தில் துளியும் ச‌ந்தேக‌மில்லை.


காஸட் பூராவும், அங்க‌ங்கே, வாண்டுக‌ளின் விளையாட்டுக‌ள், டான்ஸ், சேஷ்டைக‌ள் யாவும் இதுதானே Kids Time என‌ சொல்ல‌ தோன்றிய‌து.


சில‌ வ‌ருட‌ங்க‌ளுக்கு முன் குழந்தைக‌ளாக‌ பார்த‌வ‌ர்க‌ளை (முக்கிய‌மாக‌ ச‌ந்தோஷ், ச‌தீஷ்) இன்று பார்க்கும் போது, அன்றும் இன்றும் என‌ ப‌ல‌ ம‌ல‌ரும் நினைவுக‌ள் வ‌ந்து போயின‌.


ஜான‌வாச‌த்தின் போது, ராதா கார் ஜ‌ன்ன‌ல் வ‌ழியே ர‌வியை பார்த்த‌ பார்வை, என்ன‌, ந‌ம‌து Countdown to Glory ஆர‌ம்பித்து விட்ட‌து இல்லையா, என்று கேட்ப‌து போலிருந்த‌து.



ராதா, ர‌வி, நீங்க‌ளிருவ‌ரும், ஒருவ‌ரை ஒருவ‌ர் புரிந்துகொண்டு, காச‌ள‌வு நேச‌ம் என்று இல்லாம‌ல், வாழ்க்கையின் நிஜ‌ங்க‌ள்ஐ அனுப‌வித்து, ம‌ற்ற‌வ‌ர்தான் த‌ன‌து உயிரே என்று உண‌ர்ந்து, உத‌ய‌ ராக‌ம் பாடினால் நிச்ச‌ய‌மாக‌ ந‌ம்ப‌லாம் "வெற்றி ந‌ம‌தே"


ராதா, நீ, சீக்கிர‌மே தாலாட்டு பாட்டு பாட‌ எங்க‌ள் வாழ்த்துக்க‌ள்.


உங்க‌ள் பிரிய‌முள்ள‌


சுக‌வ‌ன‌ம், கிரிஜா,சுதா, சுபா.

PS

Kabie, Kabie இது மாதிரி லெட்ட‌ர் எழுதினாலும் ந‌ன்றாக‌வே இருக்கிற‌து இல்லையா? என்னுடைய‌ சின்ன‌ சின்ன‌ ஆசைக‌ளில், இப்ப‌டி ஒரு லெட்ட‌ர் எழுத‌வேண்டும் என்ப‌தும் ஒன்று. அது இன்று நிறைவேறிய‌து.







1 comment:

Unknown said...

இது ஒரு முத்தான கடிதம். அற்புதமான வாழ்த்து மடல். இந்த கடிதத்தை பொக்கிஷமாக வைத்து காப்பாற்ற இனைத்தளத்தில் வடிவமைந்ததிற்க்கு நன்றி ! நன்றி ! நன்றி !
என்றும் உங்கள் ஆசியுடனும், சீரும் சிறப்புடனும் வாழ உங்கள்...... ரவி - ராதா