Wednesday, December 30, 2020

Freedom Misuse

Are we misusing the freedom we got? Are we capable and deserve to have such freedom?

These are the question coming in mind after seeing/reading news around us.

For everything there is a protest from some section, attack &counter attacks, going to court asking stay.... etc etc.

I read someone gone to Bihar court to file case against Sri Ram and Lakshman of Ramayana as they left exile Sita in the forest alone!!

Why don't we concentrate our energy towards progress, education, humanity, personality development.....

Saturday, December 19, 2020

BP Reading

 ரொம்ப நாளாச்சு.. BP பாத்து. இன்னக்கி பார்க்கலாம்னு எடுத்தோம்.

முதலில் எனக்கு.... Reading 179/115 என காட்டியது. அதிகமா இருக்கே, என நினைத்த போது இரண்டாவது தடவை எடுத்து பார்க்கலாமே என சொன்னேன். உடனே on செய்து பார்த்தேன். இப்போது 177/114 என காட்டியது. மனம் ஒத்துக்க வில்லை. ரொம்ப நாளா மெஷினை எடுக்காததால் சரியாக வரவில்லை போல் இருக்கு என சொல்லி மூன்றாவது முறை எடுத்தேன். இப்போ 166/109 என காட்டியது. என்ன இது ஒவ்வொரு முறையும் மாத்தி மாத்தி காட்டுதே என சொல்லி கடைசியா பார்க்கலாம்னு நாலாவது முறை பார்த்தேன். இப்போ 147/108. சரி சரி கொஞ்சம் அதிகம்..மாத்திரை வாங்கி ஒரு வாரம் சாப்பிட்டா சரியாயிடும் என சொல்லி என் project முடித்தேன்.

அடுத்த project மனைவிக்கு... முதல் முறை 142/82. மனசு ஒத்துக்க வில்லை. மீண்டும் பார்த்ததில் 141/83. இல்லை இல்லை. இரண்டாம் முறை உடனே பார்க்க கூடாது. கொஞ்சம் time கொடுத்துதான் பார்க்க வேண்டும். ஒரு 2 நிமிடம் கழித்து பார்க்கலாம் என சொல்லி 2 நிமிடம் கழித்து பார்த்தோம். இப்போ 139/80. அடுத்து என்ன காரணம் சொல்லலாம் என யோசித்த போதுதான் தோணித்து- வலது கையில் பார்க்க கூடாது. இடது கையில் தான் பார்க்க வேண்டும் என்ற "உண்மை". சரி இடது கையில் ஒருமுறை பார்த்துவிடலாம் என பார்த்தால் 136/80. சந்தோஷம். BP perfect இருக்கு...

இதுவரை நாங்கள் மீண்டும் மீண்டும் reading எடுத்து பார்க்க கண்டுபிடித்த வேறு காரணங்கள்:

1. சாப்பிட்ட உடன் பார்த்தால் மீண்டும் பார்க்க வேண்டும்

2. கையை வைத்திருந்த angle சரியில்லை.

3. படி ஏறி இப்பதான் வந்தேன்.

4. Battery power lowவாக இருக்கலாம்.

வேறு ஏதாவது காரணம் இருந்தால் சொல்லுங்கோ. அடுத்தமுறை use ஆகும்.

சத்ரபதி சிவாஜி

 

நேற்று சத்ரபதி சிவாஜி பற்றி குழுவில் ஒரு போஸ்ட். இன்றைய நாட்களில் பள்ளியில் இவரைப்பற்றி சொல்லி தருவது இல்லை என்று. உண்மையாக இருக்கலாம்.

நான் படித்த போது, பள்ளியில் ஆண்டுதோரும் வகுப்பு மாணவர்களை 6 குழுக்களாக பிரிப்பார்கள். ஒவ்வொரு குழுவிற்கு வாரம் ஒரு வேலை. வகுப்பை பெருக்கி சுத்தம் செய்வது, குடிக்க தண்ணீர் கொண்டு வைப்பது, வீட்டுப்பாட நோட்டுகளை வாங்கி அடுக்கி வைப்பது, மாணவர்களை அமைதியாக இருக்க வைப்பது, black board cleaning, குழுவிற்குள் பாட சந்தேகம் தீர்த்து வைப்பது போன்ற வேலைகள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு குழுவும் தங்கள் அணி தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். அந்த தலைவர் தன் அணிக்கு ஒரு நாட்டு தலைவர் பெயரை சூட்டிக்கொள்ள வேண்டும்.

குழு என்பது attendance படி 7 பேரோ 8 பேரோ இருப்பார்கள். என் பெயர் Sல் தொடங்குகிறது. எப்போதும் கடைசி குழுதான். கொஞ்சம் படிப்பும் உண்டு என்பதால் தலைவர் பதவியும் உண்டு.

முதல் குழுவிலிருந்து ஒவ்வொருவறாக நாட்டு தலைவரை தேர்ந்தெடுப்பார்கள். காந்தி, நேரு, பாரதி, திருவள்ளுவர், பட்டேல் ..சி என selectஆகிவிடும். எனக்கு இவர்களில் ஒருவரை வைத்துக்கொள்ள ரொம்ப ஆசை. ஆனால் கடைசியில் இருப்பதால் எந்த வருடமும் கிடைக்காது. அப்போதுதான் என் ஆசிரியர், சிவாஜி, நேதாஜி, கோகலே பற்றி வகுப்பு எடுத்து அவர்களது பெருமைகளை சொல்லி இவர்களில் ஒருவரை தேர்ந்தெடுக்க சொன்னார். அதன் பின் 2,3 முறை சிவாஜிதான் எங்கள் குழு..

Applied Knowledge

 

Experience always has a value and to be valued.

Tried to paint a door and it took almost 8 hours for me whereas an experienced painter can do it in an hour.

Even though I am having the knowledge of painting, lack of applied knowledge results delay....

Only Applied Knowledge is Power not just a knowledge !!

கார்த்திபூ

 

கார்த்திகையன்று கார்த்திபூ என்பதை தலைக்கு மேல் சுத்துவோம்.

பனம்பூவை கருக்கி கரியாக்கி துணியில் கட்டி மூன்று குச்சிகள் நடுவில் வைத்து கட்டி, தணல் போட்டு கயிறுகட்டி தலைக்கு மேல் சுற்றினால் நெருப்பு பூ போல நம்மை சுற்றி விழும். தெரு முழுக்க சுற்றிக்கொண்டை நடப்போம்.

இப்போதெல்லாம் உண்டா என தெரியவில்லை.

Marriages

அவரவர்களுக்கு ஒரு கல்யாணம் நடப்பதே பெரிய விஷயமாக இருக்கும் இந்த காலத்தில், சிலர் 2,3 ஏன் 4 கல்யாணம் கூட செய்து கொள்கிறார்கள்.

Latest trend:

திருமணத்திற்கு பின் உடனே வெளிநாடு செல்ல வேண்டும் என்பதற்காக முதலிலேயே (2) Registered marriage. அதற்கு notice period இருப்பதால் normal marriage போல் காட்ட ஏதாவது ஒரு கோவிலில் (1) simple marriage. இன்று வேற்று மொழி, ஜாதி திருமணங்கள் பெருகிய நிலையில் (for example only - பையன் தமிழ் ஐயர் & பெண் punjabi), பெண் வீட்டார் வழக்கப்படி (3) பஞ்சாபி கல்யாணம். நம்வழக்கத்தை எப்படி விடுவது என கேட்டு அடுத்த நாளே (4) ஐயர் முறை கல்யாணம்...

இதுல ஒரு சந்தோஷபடும் விஷயம் எல்லா கல்யாணத்திலும் மாப்பிள்ளை,பெண் மாறுவதில்லை !! ஒரே pair தான்.

Latest addition: தெரிந்த ஒருவன் registered marriage ஆகி 3 வருடம் கழித்து அடுத்த வாரம் குல வழக்கபடி கல்யாணம் செய்துக்கொள்ள போகிறான்... .!!!!

என்னவோ போடா பாலகுமாரா.... உனக்கு 3 நாள் கல்யாண சாப்பாடு கிடைக்கிறதே... சந்தோஷப்படு. அதிகமா சாப்பிட்டு வயிற்று வலியை வரவழிச்சிக்காதே...

Paradise in world

There exists a paradise ...

Where ...

All wives are lovely and all husbands are loving,

All parents are respected and all children are angels,

All holidays are relaxing and all vacations are amazing,

All birthdays are celebrated and all anniversaries are rejoiced.

That place is called ... Facebook !!!

Saree Buying....

புடவை வாங்குவது அவ்வளவு ஈசியான வேலை இல்லை... கடைக்கு போனால்......

* என்ன range பாக்கறீங்க. 400/500 இல்ல 4000/5000 மா?

** எல்லாத்தையும் காட்டுங்க. விலை பத்தி ஒண்ணும் இல்லை. புடிச்சிருக்கணும், அதான் முக்கியம்.

* என்ன material பாக்கறீங்க

** எல்லாத்தையும் பாக்கலாம்.

* ஏதாவது கலர் specific வேணுமா?

** எல்லா கவரும் இருக்கு. Special, புது கலரா வேணும்

* Self design இல் printed

** இரண்டையும் காட்டினால்தான் select பண்ண முடியும்

* இதுல இந்த 6 கலர் வருது.

** வேற என்ன கலர் இருக்கு. இது எதுவும் நல்லா இல்லை.

* எதுவும் பிடிக்கலையா.. இது latest இப்பதான் வந்தது. பாருங்க

** சரி.. full பிரிச்சி காட்டுங்க.

* எப்படி இருக்கு?

** பரவாயில்லை. ஆனா இந்த பல்லுக்கு பதில் அந்த புடவையில இருக்கிற பல்லு வருமா?

* வராதுமா. வேற எது பிடிக்குது

** அப்போ இந்த கலர் புடவைல அந்த பார்டர் வர புடவையை காட்டுங்க

* இரண்டும் வேற வேற. வராதும்மா

** அப்படினா இந்த கலர் பார்டர்ல அந்த பார்டர் design வருமா?

* இல்லையம்மா. இதெல்லாம் single piece தான் வந்திருக்கு.

** சரி... இதன் நீளம் full இருக்குமா? Blouse bit சேர்க்காத சொல்லரேன்.

* இது extra length பபடவைங்கம்மா

** போனதடவையும் இதையேதான் சொன்னீங்க. இரண்டு pleatக்கு மேல வரல. Ok இந்த புடவைய தனியா வைங்க. வேற பாத்துட்டு final select பண்றேன்.

*

* இந்த புடவையையே எடுத்துக்கறீங்களா? Bill போட சொல்லட்டுமா?

** சரி இதையே எடுத்துக்கறேன்.. பில் கொண்டாங்க...... ஒரு நிமிஷம்.... அதோ அந்த அம்மா கையில ஒரு புடவை வச்சிருக்காங்களே... அத காட்டுங்க.. ரொம்ப நல்லா இருக்கே... அவங்க வாங்கிட்டாங்களா?

* இன்னும் வாங்கல...

** அப்போ அந்த புடவைக்கு bill போட்டு கொண்டாங்க.

ஒரு வழியா bill pay பண்ணி delivery வாங்கி, கட்டை பையும் வாங்கி (extra வா இரண்டு சாதா கவர் கேட்டு வாங்கி) அதில் போட்டு வீட்டுக்கு வந்ததும்,

**அடடா... இதே கலர் புடவை எங்கிட்ட இருக்கே. கடைல பார்த்த போது வேற மாதிரி தெரிஞ்சது. இப்போ வேற மாதிரி இருக்கு. ஜாக்கிரதையா மடிப்பு கலையாம எடுத்து வைங்கோ. நாளைக்கு போய் வேற புடவை மாத்தனும்....